வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஜூலை, 2010

இலங்கை தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தினரை அப்புறப்படுத்த வேண்டும் திருமாவளவன்

திட்டக்குடி வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எந்த ஒரு வாக்குறு தியையும் நிறைவேற்றாத ஒரு அரசுதான் சிங்கள அரசு. ஏற்கனவே முகாமில் உள்ள அனைத்து தமிழர்களையும் குடியமர்த்துவதாய் சிங்கள அரசு மத்திய அரசிடம் உறுதி அளித்து இருந்தது. ஆனால் இன்னும் 2லட்சம் தமிழர்கள் முகாமில்தான் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இன்னும் விடுதலை செய்யாமல் அகதிகளாய் நிற்கின்றனர்.
தமிழர்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் குடியிருந்தற்கு கூட அடையாளமில்லை. அந்த கிராமங்களில் சிங்கள ராணுவத்தின் ஆக்கிரமிப்புதான் தொடர்ந்து இருக்கிறது. மத்திய அரசு சிங்கள அரசை செல்ல பிள்ளையாக நடத்தி வருகிறது. அந்த துணிச்சலில்தான் ராஜபக்சே மத்திய அரசின் இந்திய குழுவினரை தமிழர்கள் வாழும் பகுதிக்கு அனுமதிக்க மாட்டோம் என கொக்கரித்து இருக்கிறார்.
இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்திய அரசுக்கு சவாலாக செயல்படும் சிங்கள அரசிற்கு பாடம் புகட்ட வேண்டும். தமிழர் பகுதியில் இருக்கும் சிங்கள ராணுவத்தை அப்புறப்படுத்த வேண்டும். தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை இந்திய அரசு பொறுப்பேற்று செய்ய வேண்டும். இந்த ஆற்றலும், செயல் திறனும் மத்திய அரசுக்கு இருக்கிறது என நம்பிதான் இந்த வேண்டுகோளை முன் வைக்கிறோம். இந்திய அரசின் தவறுதலான வெளியுறவு கொள்கைதான் குறிப்பாக தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்திய அரசு சிங்கள அரசுடன் கொண்டுள்ள வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக அரசு தமிழக முதலமைச்சருடன் பேசி அதன் அடிப்படையில் சிங்கள அரசுடன் ஒப்பந்தம் போட வேண்டும்.
தமிழக அரசுடன் கலந்து பேசாமல் சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். சேது சமுத்திர திட்டம் வகுப்புவாத, மதவாத சக்திகளின் சதிவலைக்குள் சிக்கிக்கொண்டது. புராணக்கதைகளை முன் நிறுத்தி அறிவியல் வளர்ச்சிக்கு தடை போடுகின்றன. இது இந்திய தேசத்திற்கு நேர்ந்திருக்கும் தலைகுனிவுதான். தி.மு.க. கூட்டணி தற்போது மிகவும் வலுவாக உள்ளது. பா.ம.க. இணைந்தால் தி.மு.க. கூட்டணி மேலும் வலுப்பெறும். ஆகவேதான் பா.ம.க.வை திமுக கூட்டணிக்கு அழைக்கின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’