-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 28 ஜூலை, 2012
புதன், 25 ஆகஸ்ட், 2010
வெகுஜன போராட்டம் நடத்தப்படும்; த.ம.வி.புலிகள் கட்சி எச்சரிக்கை
மர்மமான முறையில் காணாமல் போயுள்ள தமது கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி கடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
வியாழன், 17 ஜூன், 2010
நீதிமன்ற உத்தரவை மீறியும் புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள்
புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ள போதிலும் விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
திங்கள், 15 பிப்ரவரி, 2010
த.ம.வி.புலிகள் தனித்துப் போட்டியிட முடிவு

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் கைலேஸ்வரராஜா எமது இணையத்தளத்துக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.
தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்று மாலை தமது கட்சி இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
சனி, 6 பிப்ரவரி, 2010
கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரம்

தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணாவிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது இந்த நிலைமை மேலும் உக்கிரமடையக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் இரகசியமாக எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவளித்துள்ளதாக கருணா தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.
இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்து போட்டியிடக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விசேட கூட்டமொன்றை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிறு, 13 டிசம்பர், 2009
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பிள்ளையானின் ரி.எம்.வி.பியின் தீர்மானம் குறித்து குழப்பநிலை!

கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையானின்) அமைப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரி.எம்.பி.வி) கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளபோதிலும் அக்கட்சி நேற்று விடுத்த அறிக்கையானது, அது இன்னும் இவ்விடயத்தில் எந்தப்பக்கம் சாய்வது என்பதைத் தீர்மானிக்காத மதில்மேல் பூனை நிலையில் இருப்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எம்மக்களின் இழந்த வாழ்வை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல்தீர்வைத் தரக்கூடிய கட்சியைப் பின்புலமாகக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும் என்று அக்கட்சி தனதறிக்கையில் தெரிவித்துள்ளது. அதிக அதிகாரங்களைக் கொண்ட அரசியல்தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் அரசியல் ரீதியான இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ள இச்சமயத்தில் தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கின்ற அனைத்து அரசியல்கட்சிகளையும் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புகளையும் எம்முடன் இணைந்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கிறோம் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
சனி, 12 டிசம்பர், 2009
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல்ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபாடு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல்ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் தமிழ்ப் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைவரையும் நினைவில் நிறுத்தி, எமது இன்றைய அரசியல் நிலைப்பாட்டை இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம். எமது முன்னோர் விட்ட தவறுகளாலும், தவறான கணிப்பீட்டாலும், மற்றும் துரோகங்களாலும் எமது மக்களின் ஜனநாயக, அரசியல் உரிமைக்கான போராட்டங்கள் பின்னடைந்து, இன்று எமது மக்கள் சொல்லில் அடங்காத துயரத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர். இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம். நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் விடிவுக்காகவும், எமக்கான அரசியல் உரிமைக்காகவும் அபிவிருத்திகளையும் பெற்றுக் கொள்வதற்கான வழியாகவும் பயன்படுத்த வேண்டும். இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச்சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும். இன்று எம்மக்களுக்கு உள்ள அரசியல்ரீதியான ஒரே நம்பிக்கை மாகாண சபை முறைமையாகும். ஆனாலும் இம்மாகாண சபைக்கென பரிந்துரை செய்யப்பட்ட குறைந்தபட்ச 13வது அரசியல் அதிகாரங்களும் இல்லாத நிலையிலேயே நாம் உள்ளோம். தமிழ் மக்களுக்கென கொண்டுவரப்பட்ட மாகாணசபை சுமார் 20வருடங்களுக்கு பின்பே அம்மக்களினால் அனுபவிக்கக் கிடைத்தது. எனினும், அதற்கான முழுமையான அதிகாரங்கள் இல்லாமலும் சுயாதீனமாக செயற்பட முடியாத அதிகாரக் குறுக்கீடுகளும் உள்ள நிலையிலேயே மாகாணசபை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இழப்புக்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களின் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் பூர்த்தி செய்யமுடியாத துர்ப்பாக்கிய நிலையிலேயே நாம் உள்ளோம். எனவே தான் இவ்வாறான நிலைமைகளை கருத்திற்கொண்டு ராஜதந்திர ரீதியில் சிந்தித்து 13வது அரசியல் அதிகாரங்களை தாண்டிய இன்றைய கால சூழ்நிலைக்கேற்ப எம்மக்கள் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய அதிகாரங்களுடனான அரசில் தீர்வொன்றினை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே நாம் எமது நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளாகிய நாம் இதற்கான அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளோம். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தமிழ் அமைப்புக்களையும் எம்முடன் இணைத்து இந்த அரசியல் நகர்வுகளில் செயற்படுமாறு வேண்டி நிற்கின்றோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன், 3 டிசம்பர், 2009
தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு த.ம.வி.பு. நிபந்தனையற்ற ஆதரவு
.jpg)
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது என்ற முடிவை தற்போது மீண்டும் உறுதிபடுத்தியுள்ளனர்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன், பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஷ்வரராஜா,மாகாண சபை உறுப்பினர்களான சோமசுந்தரம் புஷ்பராஜா மற்றும் நாகலிங்கம் திரவியம் உட்பட 7 பேர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு முன்னதாக சில விடயங்கள் குறித்து பேச வேண்டும் என தமது கட்சியின் அரசியல் குழு எடுத்த தீர்மானம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விளக்கிக் கூறியதாக தெரியவருகின்றது.
கிழக்கு மாகாண சபையில் இரத்தினம் மௌனகுருசாமி பதவி ஏற்காததன் காரணமாக கடந்த 18 மாத காலமாக இருக்கும் போனஸ் ஆசன வெற்றிடத்திற்கு பூபாலப்பிள்ளை பிரசாந்தனை நியமிக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை இச்சந்திப்பின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவ்வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
மேலும் கிழக்கு மாகாண சபை நிர்வாகம் ஆளுனரின் தலையீடு இன்றி சுயமாக இயங்குவது,அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு மற்றும் அபிவிருத்தி தொடர்பான செயல் திட்டங்களுக்கு இணைப்பாளர்களை நியமிப்பது போன்ற விடயங்கள் தொடர்பாகவும் சாதகமான பதில் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













.jpg)
