
உலக தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 3 நாள் செம்மொழி கலை விழா கோவையில் நேற்று ஆரம்பமாகியது. விழாவினை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முரசு கொட்டி ஆரம்பித்து வைத்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், பறையாட் டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கோலாட்டம், சேவையாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், சாட்டைகுச்சி ஆட்டம், குறவன் குறத்தி ஆட்டம், ஜிம்னா மேளம் உள்ளிட்ட 50 வித கலை நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.