வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சிறைச்சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறைச்சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 ஜூன், 2010

தண்டப்பணம் செலுத்த முடியாமல் 10000 கைதிகள் சிறைச்சாலைகளில்

சிறு குற்றங்களுக்காக வேண்டி தண்டப்பணம் செலுத்த முடியாமல் 10000 கைதிகள் சிறைச்சாலைகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதன், 9 டிசம்பர், 2009

விடுதலை கோரி கைதிகள் உண்ணாவிரதத்தில் குதிப்பு


தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 பேரும் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 47 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 30 பேரும் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அரசியல் கைதிகளான தமக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியே இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதேவேளை தடுத்து வைக்கப்பட்டள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி வவுனியா வைரவப்புளியங்குளத்திலுள்ள மனித உரிமை ஆனைக்குழு அலுவலகத்திற்கு முன்னால் நாளை வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அமைதிப் போராட்டம் இடம் பெறவுள்ளது. மனித உரிமை ஆனைக்குழுவிற்கு முன்னால் கூடும் கைதிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அமைதிப் பேரணியாக வவுனியா செயலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கவுள்ளனர்.

புதன், 18 நவம்பர், 2009

தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு : புத்திர சிகாமணி


"தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கைகள் இன்று கிடைக்கப்பெறும். இதற்கென புதிதாக பத்து சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும், பாதிக்கப்பட்ட தமிழ்க் கைதிகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும்" என நீதி,சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் புத்திர சிகாமணி தெரிவித்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலை தமிழ் கைதிகள் தாக்கப்பட்டமை, அநுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகள் தாக்கப்பட்டமை, இது தொடர்பில் நேற்று மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்து நீதி, மறுசீரமைப்பு அமைச்சர் புத்திர சிகாமணி மேற்படி எமது இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் காரணமாக இதுவரை, நாடளாவிய ரீதியில் 631 தமிழ்க் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் அனைவருக்கும் அதிவிரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் தாக்கப்பட்டவர் சார்பிலோ அல்லது பாதிக்கப்பட்டவர் சார்பிலோ இதுவரை எழுத்து வடிவில் வாக்குமூலங்கள் எதுவும் பெறப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதல்: நால்வர் காயம்


அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இரு கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் நால்வர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

"இன்று அதிகாலை அதிகாரி ஒருவர் கைதிகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நான்கு கைதிகள் கயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வாரியபொல பொலிஸ் நிலையத்திலிருந்து அதிகாரி ஒருவர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ்-சிங்கள கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கைக்கலப்பிலும் ஐந்து பேர் வரை காயமடைந்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தக் கோரி நேற்றைய தினம் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.