வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சம்பந்தன் - சுரேஸ் தோல்வியின் விளிம்பில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சம்பந்தன் - சுரேஸ் தோல்வியின் விளிம்பில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மார்ச், 2010

தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் மூன்றிலொன்றாகக் குறையும்!

சம்பந்தன் - சுரேஸ் தோல்வியின் விளிம்பில்!!

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

2010 ஏப்ரல் 08ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம், ஏற்கெனவே இருந்த 22 உறுப்பினர்களிலிருந்து 7 அல்லது 8 ஆகக் குறையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுயாதீனமான சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுகள் பெரும்பாலும் வடக்கு – கிழக்கிலுள்ள தொகுதிகளில் வாழும் வயதும் அனுபவமும் வாய்ந்த வாக்காளர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டுள்ளன.