வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
குற்றத் தடுப்புப் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குற்றத் தடுப்புப் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

முன்னாள் இராணுவ அதிகாரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும், இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் அசோக தொரதெனிய, குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பிலேயே அவர் விசாரணை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் தொரதெனிய, பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொரதெனிய, கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது அரசாங்கத்தின் தேர்தல் துஸ்பிரயோகங்களுக்கு இடமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசாங்க தரப்பில் சுமத்தப்பட்டிருந்தது.

புதன், 17 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது:குற்றத் தடுப்புப் பிரிவினர்


ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து வாக்கு மூலத்தினை பதிவு செய்துள்ளதாக குற்றத் தடுப்புப் பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தில் கடமையாற்றிய வேளை 4 ஆயுதக் கொள்வனவுகளில் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஊழல் மோசடிகள் குறித்தே குற்றத்தடுப்புப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.

ஹய் கோப் நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கொள்வனவு மோசடி தொடர்பான வழக்கினை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் லங்கா ஜெரத்ன இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் இருந்து கடந்து ஞாயிற்றுக்கிழமை வாக்கு மூலத்தை பதிவு செய்ததாகத் தெரிவித்த குற்றத்தடுப்புப் பிரிவினர்,பிரிடிஷ் போர்னியோ டிபன்ஸ் கம்பனி மற்றும் ஹய் கோப் கம்பனிகள் குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் 4 ஆயுதக் கொள்வனவுகளின் போதும் தாம் முறையான விதிமுறைகளை பின்பற்றியுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா வாக்குமூலத்தல் தெரிவித்ததாக குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.