வவுனியாவிலிருந்து 758 குடும்பங்களைச் சேர்ந்த 2700 பேர் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டனர்.
வவுனியா வடக்கிலும் முல்லைத்தீவு முள்ளியாவளை பிரதேசத்திலும் மீளக்குடியமர்த்தப் படவென இவர்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.













