வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 மே, 2013

கருத்து முரண்பாடுகளை கூட்டமைப்பு தீர்த்துக்கொள்ளவேண்டும்: ரணில்

மிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வடமாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் இந்த கட்சிகள் தமக்குள் இருக்கின்ற கருத்து முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளவேண்டும் என அவர் இந்த சந்திப்பின் போது கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் முதலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேம சந்திரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் தமிழரசு கட்சியின் சிரேஷட உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினார் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 'சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதனை அவர்கள் யாவரும் ஒத்துக்கொள்கின்றனர்'இருப்பினும் இவர்கள் பிளவுப்படவில்லை. ஆனால் அரசாங்கம் பிரிவை ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்றார். இதேவேளை வடக்கிலுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களை மே மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் சந்திக்கவுள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைக்குள் ஒற்றுமையை கொண்டுவரும் நோக்கிலேயே இந்த கூட்டங்களை சிவில் அமைப்புகள் ஒழுங்கு செய்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’