மலர்கின்ற புத்தாண்டு எமது மக்களின் மனங்கள் தோறும் நீடித்த நிம்மதியுடன் கூடிய புது மகிழ்வை தரவேண்டும் என்றும், அதற்காக நாம் பிறக்கின்ற ஒவ்வொரு காலச்சூழல்களையும் எமது மக்களுடன் சேர்ந்து சரியான திசைவழி நோக்கி நகர்த்தி செல்ல தொடர்ந்தும் உறுதி கொண்டு உழைப்போம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்திருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வாழ்த்துச் செய்தியில்,..... தமது கனவுகள் ஈடேறும் என்ற எதிர்கால நம்பிக்கையுடனேயே எமது மக்கள் பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டுகளையும் வரவேற்று மகிழ்கிறார்கள். எமது மக்கள் அரசியல் சம உரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது மண்ணில் முகமுயர்த்தி வாழவே விரும்புகிறார்கள். ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு காண்பதே எமது மக்களின் விருப்பம். புத்தாண்டின் புது மகிழ்வு என்பது எமது மக்கள் புத்தாடை அணிந்து, ஆடிப்பாடி மகிழும் வேடிக்கை நிகழ்வு மட்டும் அல்ல. பழையன கழிந்து புதியதோர் வாழ்வின் சூழலுக்குள் பிரவேசிக்க ஆசைப்படும் ஆனந்த திருநாளாகவே ஒவ்வொரு புத்தாண்டுகளையும் எமது மக்கள் அகம் மகிழ்ந்து வரவேற்கின்றார்கள். நீடித்த மகிழ்ச்சியும், நிரந்தர சமாதானமும் தரவல்ல அரசியல் தீர்வொன்றே இனி இங்கு நடக்கவேண்டிய மாற்றம் என்பதே எமது மக்களின் விருப்பமாகும். ஆயினும், அந்த நியாயமான விருப்பங்கள் முழுமையான வெற்றிகளை அடைவதில் தடைகளை எதிர்கொள்ளும் சவால்களே இங்கு தோன்றி வருகின்றன. எமது மக்களின் கனவுகளை சிதறடிக்கும் வகையில், மக்களை வழி நடத்தி செல்ல வேண்டிய தமிழ் பேசும் சக அரசியல் தலைமைகள் மதி நுட்ப சிந்தனைகளை மறந்து எமது மக்களின் விருப்பங்களுக்கு மாறாக திட்டமிட்டே செயலாற்றி வருகின்றார்கள். ஆனாலும், தடைகளும், சவால்களும் எங்கிருந்து வரினும் தமிழ் பேசும் மக்களின் இலட்சிய கனவுகள் விரைவாக வெற்றிபெற நாம் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம். அதற்காக,..பிறக்கின்ற புத்தாண்டில் இருந்து எமது மக்களை மதிநுட்ப சிந்தனைகள் வழிநடத்தி செல்லட்டும். வறுமையற்ற வாழ்வு, வன்முறையற்ற சூழல், வாழ்வியல் எழுச்சி, எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி, அரசியல் உரிமை சுதந்திரம் என தொடர்ந்தும் சகலதும் பெற்று நாம் நிமிர்வோம். இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற பிறந்திருக்கும் சித்திரை புத்தாண்டை சரிவரப் பயன்படுத்த மக்களுடன் இணைந்து எழுவோம் என்றும் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’