வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பாஸ்டன் குண்டு வெடிப்பு :சந்தேகநபர்களில் ஒருவர் சுட்டுக்கொலை


அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது நடந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை இலக்குவைத்து அமெரிக்க பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவரை சுட்டுக்கொலைச்செய்துள்ளதாகவும் மற்றையவரை தேடிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றின்; பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பொலிஸார் பெரும் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். பாஸ்டனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரொன்றை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. பாஸ்டன் மராத்தன் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள படங்களில், வெள்ளைநிற பேஸ்பால் தொப்பியொன்றை அணிந்தவாறு காணப்படும் சந்தேகநபரே தப்பிச்சென்றுள்ளார். மஸாச்சூசெட்ஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தேகநபர்கள் துப்பாக்கிமுனையில், காரொன்றை உரிமையாளருடன் சேர்த்து கடத்திச் சென்றிருந்தனர். பின்னர், அவர்கள் கார் உரிமையாளரை விடுவித்துவிட்டு தப்பிச் சென்றனர். வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரை நிறுத்துவதற்கு முன்னதாக அவர்கள் பொலிசாருடன் துப்பாக்கிச் சண்டடையில் ஈடுபட்டதுடன், கைக்குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர், அவர்களைத் துரத்திச் சென்று சுட்டதிலேயே சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளர். இந்த துப்பாக்கிச் சண்டையில் அதிகாரி ஒருவர் மோசமாக காயமடைந்துள்ளார். பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பிலான படங்களில் வெள்ளைத் தொப்பி அணிந்திருந்த, இரண்டாவது முக்கிய சந்தேகநபரையே தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’