இந்திய நாடாளுமன்றம் உறுபினர்கள் குழு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக்குழு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என்றும் வடக்கிற்கான விஜயத்தையும் அந்த குழுவினர் மேற்கொள்வார்கள் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு பேர் கொண்ட இந்த குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூட அங்கம் வகிக்கவில்லை. எனினும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிர்வாக அதிகாரிகள் இருவர்; அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த குழுவில் பகுஜன் சமாஜ்,பாஜக , திரிணமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டுமே அடங்குகின்றனர். இவர்கள் இலங்கை தமிழர்கள் நலவாழ்வுக்கான புனரமைப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கோள்ள உள்ளனர் என்றும் அந்தச்செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழர்களின் நலவாழ்வுக்காக இந்தியா பல்வேறு கட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த உதவிகள் சரியாக பயன்படுத்த படவில்லை என்றும், இன்னமும் தமிழ் மக்களுக்கு புணரமைப்புத் திட்டங்கள் சென்றடையாமல் இன்னமும் துயரத்தில்தான் மக்கள் வாழ்கிறார்கள் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையிலேயே இந்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
இந்த குழுவினர் தங்களுடைய விஜயத்தின் நிறைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’