பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷராப்பை அந்த நாட்டு பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.
இஸ்லாமாபாத்திற்கு அப்பால் உள்ள இவரது வீட்டிலேயே இவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிபதிகளை தடுத்துவைத்திருந்தமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷராப்புக்கான பிணையை நீடிப்பதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை நிராகரித்தது. நீதிபதி சௌகத் அஸீஸ் சித்திக்கியினால் பர்வேஷ் முஷராப்புக்கான பிணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து பர்வேஷ் முஷாரப் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷராப்பை கைதுசெய்யுமாறு இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. இந்த நிலையிலேயே பர்வேஷ் முஷராப் கைதுசெய்யப்பட்டுள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’