
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் விடயத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளிடையே முரண்பட்ட நிலை காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் கேட்டபோதே சம்பந்தன் எம்.பி. இவ்வாறு கூறினார். "நாம் ஒற்றுமையாகவே இருப்போம். இவ்விடயம் தொடர்பில் எல்லோருடைய கருத்தினையும் மதித்து முடிவு எடுக்க வேண்டும். எங்களுக்குள் நாம் பிரச்சினைபட முடியாது. நாம் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம். இந்த பிரச்சினைக்கு சுமுகமான தீர்வினை காண்பதற்கு நாம் முயற்சி எடுப்போம் என்று தெரிவித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’