வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 ஏப்ரல், 2013

'மனிதக் கணினி' சகுந்தலா தேவி காலமானார்



லகின் வேகமான 'மனிதக் கணினி' என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி தனது 83 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் சகுந்தலா தேவி வல்லவர் என்று புகழ்பெற்றிருந்தார். அவர்,சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார். பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர். உலகில் 58 மில்லியன் பேரில் ஒருவர் தான் இவரைப் போல திறமைகொண்டவராக இருப்பார் என்று விற்பன்னர்கள் கருதுகின்றனர். இவரது குடும்பத்திலும் எவரும் படித்தவர்கள் இல்லை. அவரது தந்தை ஒரு மாயாஜால வித்தைக் காரர். 1939 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்த சகுந்தலா தேவி, அவரது திறமைக்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’