முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க, தனது சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளை வெளிப்படுத்தவில்லை எனும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மே 17ஆம் திகதி இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்னிலையில் ஒரு முழுமையான வாக்குமூலத்தை வழங்கவுள்ளார்.
கடந்த மார்ச் 18ஆம் திகதி விசாரணைக்காக வந்திருந்த ஷிராணி பண்டாரநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்ட சிலர் இருப்பதை ஆட்சேபித்திருந்தார்.
இலஞ்ச ஆணைக்குழுவின் நியாயாதிக்கம் மற்றும் குறித்த ஆணையாளர்களின் இருப்பு தொடர்பாக ஆட்சேபித்தபோதும், முன்னாள் நீதியரசர், விசாரணை தொடர்பாக முழுமையான வாக்குமூலமொன்றை வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஷிராணி பண்டாரநாயக்க இன்று தனது வழக்குரைஞர்கள் குழுவுடன் ஆணைக்குழுவிற்கு சென்றபோது, ஆணைக்குழுவின் அதிகாரிகள் விசாரணைக்கு தயாராக இருக்கவில்லை.
தாமதமாக தொடங்கிய விசாரணை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அடுத்த விசாரணைக்கான திகதி மே 17 என இரு தரப்பினரும் உடன்பாடு கண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’