வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 மார்ச், 2013

இலங்கையின் தேயிலை, ஆடைகளை பகிஷ்கரிக்க பேச்சு



லங்கையின் தேயிலை மற்றும் ஆடைகளை பகிஷ்கரித்தல், சுற்றுல்லா பிரயாணிகளை இலங்கைக்கு அனுப்பல் ஆகியன தொடர்பாக சர்வதேச நிறுவனங்கள் தலைமையில் பேச்சு நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த பேச்சு இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார். இதன் ஊடாக இலங்கையின் தேயிலை, ஆடை மற்றும் உல்லாச பயணிகளின் வருகை ஆகியவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதனால் இந்த வார இறுதிக்கு முன்னர் அனைத்து கட்சி மாநாட்டை கூட்டுவதற்கான திகதியை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான சிறந்த பொறிமுறை அனைத்து கட்சி மாநாட்டை ஏற்படுத்துவதாகும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’