14 இலட்சம் மக்கள் கையொப்பமி;ட்ட மனுவொன்றை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கையளித்துள்ளது.இந்த மனுவில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் சுயாதீனமான ஒரு அமைப்பினால் விசாரிக்கப்படவேண்டும் என்றும் கூறியியுள்ளது.இலங்கை அரசாங்கம் தான் செய்த குற்றங்களுக்காக தண்டிக்கப்படாது தப்பித்துக்கொள்ளும் நிலைமையை மாற்றவேண்டும் என்றும் பிரதமரிடம் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுதலைப்புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை விசாரிக்க ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு இந்திய அரசாங்கம் ஆதரவளிக்கவேண்டும் என்றும் அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள மனித உரிமைகள் தொடர்பான நிலைமையை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் தலைமையிலான ஒரு பொறிமுறை தேவை எனவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவேண்டும் எனவும் மாற்றுக் கருத்துடையோரை பயமுறுத்தும், தாக்கும் நிலைமைக்கு முடிவுக்கட்டவேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -->

  











0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’