இ லங்கைக்கு எதிராக மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா இல்லையா என்பது குறித்து சட்ட சரத்திற்கு அமையவே தீர்மானிக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்நாட்டில் தமது ஆதரவு கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் வலியுறுத்தி வருவதாக பிரதமர் குறி;ப்பிட்டார்.
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது சர்வதேச சட்டதிட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக தி.மு.கவினர் குற்றம் சுமத்துகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான புதல்வர் பாலசந்திரன் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படம் காரணமாகவும் இந்த எதிர்ப்பு வலுவடைந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகளின் பிரதான போராட்ட தொனிப்பொருளாகவும் இந்த விடயம் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் கடந்த வருட அமர்வின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா தமது ஆதரவை வெளியிட்டிருந்தது. எனினும், இந்தமுறை பிரேரணைக்கு இந்தியா வாக்களிப்பது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுக்கவில்லை.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’