
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் புத்திசாதூரியமானவர், வெளியுறவுக் கொள்கையின் அவசியத்தை அறிந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரண்டாம் தடவை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பரவலாக்கியதாகவே கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில பொறுப்புக்களை நம்பிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி சிலரிடம் ஒப்படைத்துள்ளதாகத் குறிப்பிட்டுள்ள அவர் பொறுப்புக்களை ஏற்றவர்கள் உரிய முறையில் தங்களது கடமைகளை ஆற்றத் தவறியுள்ளதாக தயான் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் வெளிவிவகார அமைச்சர் தெரிவு தொடர்பில் பிரச்சினை கிடையாது என்ற போதிலும் யுத்தத்தின் பின்னரான மனோ நிலை முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’