அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றுள்ள இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரத்தினத்தின் சகோதரரான ரெங்கன் ராஜரத்னம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிதி விபரங்களை உள் தகவல்களை இரகசியமாக அறிந்து அதன் மூலம் பங்குகளை வாங்கி பின்னர் விற்பனை செய்யும் 'Insider Trading' நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 2011 ஆம் ஆண்டு ராஜ் ராஜரத்தினக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அவர் சுமார் 75 மில்லியன் டொலர்கள் மோசடி செய்ததாகவும் பல முதலீட்டாளர்களுக்கு நட்டம் ஏற்பட்ட காரணமாக இருந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தவிர சுமார் 93 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
மேலும் அவரது கெலியொன் குழுமமும் மூடப்பட்டது. இந்நிலையில் ராஜ்
ராஜரத்தினத்தின் சகோதரான ரெங்கன் என அறியப்பட்ட ராஜரெங்கன் மீது அவரது
அண்ணனின் மோசடியில் தொடர்புபட்டிருந்தமை தொடர்பில் வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது பிணையங்கள் மீதான மோசடி, சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது குற்றச்சாட்டுக்களின் படி சுமார் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரெங்கன் ராஜரத்தினம் தற்போது பிரேசிலில் வசித்து வருவதாக
தெரிவிக்கப்படுகின்றது. இவரை நாடுகடத்தும் கோரிக்கையை அமெரிக்கா
விடுக்கலாம் எனத் தெரியவருகின்றது.
இவ் வழக்கானது அமெரிக்காவில் அக்காலப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையில் பிறந்த தமிழரான ராஜ் ராஜரத்தினம் போர்ப் சஞ்சிகையின் படி
2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 236 ஆவது மிகப்பெரிய பணக்காரர் எனக்
கணிக்கப்பட்டதுடன் என்பதுடன் அப்போதைய அவரின் சொத்தின் மதிப்பு 1.8
பில்லியன் அமெரிக்க டொலர்களாக எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’