வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 மார்ச், 2013

நடுநிலையான விசாரணைக்கு ஆதரவு: இந்தியா



போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், நடுநிலையான - சுதந்திரமான - வெளிப்படையான விசாரணை தேவை என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த இந்தியா அரசின் நிலைப்பாடு என்ன என்று, விரைவில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில், நேற்றும் இலங்கை போர்க்குற்றங்கள் குறித்தும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை குறித்தும் தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கேள்விகளை எழுப்பின. அதற்குப் பதிலளித்துப் உரையாற்றும் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் மேற்கண்டவாறு தெரிவித்தார். ' இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் கௌரவமாக வாழத்தக்க வகையில், சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் ஜெனிவாவில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. அதே நோக்கத்தில் மத்திய அரசின் நிலையை இறுதி செய்யும் பணிகளில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய அரசின் நிலை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும்'என்று சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’