டி ல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த டிசெம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு தெருவோரம் வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் டெல்லி மற்றும் சிங்கப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.ஆனால் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த டிசெம்பர் 29ம் தேதி உயிர் இழந்தார். இந்த வழக்கில் சிறுவன் உட்;பட 6 பேரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் பஸ் சாரதியான ராம் சிங் தான் முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார். இந்த வழக்கில் அவரது தம்பி முகேஷும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதில் சிறுவனை தவிர மீதமுள்ள 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பிற கைதிகள் தவிர தங்களுக்குள்ளும் பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டனர். இதையடுத்து அவர்கள் எங்கே தற்கொலை செய்து கொள்வார்களோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் சிறை எண் 3ல் அடைக்கப்பட்டிருந்த ராம் சிங் இன்று காலை 5 மணிக்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தீன் தயாள் உபத்யாய மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’