வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 பிப்ரவரி, 2013

இந்திய அமைதிப்படையினருக்கு யாழில் அஞ்சலி



1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட 1,300 இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
பலாலி விமானப்படை தலைமையகத்தில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படை வீரர்களின் நினைவுத் தூபியில் இந்திய தூதுவர் அசோக் கே. காந்தா மற்றும் அவரது துணைவியார் சாளினி காந்தா, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில், யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பரசூட்டில் வந்து தரையிறங்கிய 1300 இந்திய அமைதிப்படையினர், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிர் நீத்த இந்திய அமைதிப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பலாலி விமானப்படைத் தலைமையக பகுதியில் நினைவுத் தூபி அமைக்கப்பட்டு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய துனைத்தூதுவர் வே.மகாலிங்கம், உட்பட யாழ். மாவட்ட முப்படையினரும் கலந்துகொண்டனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’