வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 பிப்ரவரி, 2013

நயினாதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இறங்குதுறை ஜனாதிபதியால் திறந்து வைப்பு


யினாதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நயினாதீவுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் நாகவிகாரைப் பகுதியில் கடற்படையினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இறங்குதுறையை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

அத்துடன், அங்கு கூடியிருந்த மாணவர்கள் மற்றும் மக்களுடனும் ஜனாதிபதி கைலாகுகொடுத்து கலந்துரையாடினார்.

30 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ்விறங்குதுறை ஊடாக நயினாதீவு நாகவிகாரைக்கு வருகைதரும்  பக்தர்கள் நன்மையடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நயினாதீவு நாகபூசணி கோவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டதுடன் அங்கு கூடியிருந்த மக்களுடனும் கலந்துரையாடினார்.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ கடற்படை, தரைப்படை தளபதிகளுடன் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.\











-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’