வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 பிப்ரவரி, 2013

பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதில்லை; கனடா மீண்டும் அச்சுறுத்தல்


கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை பகிஷ்கரித்தல் தொடர்பான தனது பயமுறுத்தலை கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் மீண்டும் புதுப்பித்துள்ளார்.
"இலங்கையில் மாற்றங்கள் நடந்தாலன்றி" அங்கு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் நான் கலந்துகொள்ளமாட்டேன் என ஹாப்பர் கனேடிய நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார். இலங்கையின் நிலைமை மோசமடைந்து வருவது பற்றி தான் விசனமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டை பகிஷ்கரிக்க வேண்டாம் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா கோரியுள்ள போதும் கனடா பொதுநலவாயத்தில் இலங்கை எதிரான தனது அழுத்தத்தை அதிகரித்து வருகின்றது. இரண்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அலட்சியம் செய்துவிட்டு பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்ததையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட யுத்ததின்போது நடந்த கொடூரங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு முறையான பதில் வழங்காவிடின் தான் இந்த மாநாட்டை பகிஷ்கரிக்கபோவதாக கூறியுள்ளார். -

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’