வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 பிப்ரவரி, 2013

இலங்கையையிட்டு அமெரிக்கா ஏமாற்றம்: பிளேக்


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வேலைத்திட்டம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இலங்கை தவறியுள்ளதால் அமெரிக்கா ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும், அரசாங்கம் வடமாகாணசபைக்கான தேர்தலை நடத்தவில்லை என ஆசிய மற்றும் பசுபிக் உபகுழு முன் உரையாற்றுகையில் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் இதுவரையில் மெதுவானதாகவே உள்ளது. யுத்தம் முடிந்து 4 வருடங்கள் கழிந்துவிட்டபோதும் அரசாங்கம் வடமாகாணசபை தேர்தலை நடத்தவில்லை என்பது எமக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை என்பதோடு, இதற்கிடையில் 13ஆவது திருத்தத்தால் வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வும் கூட குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனநாயகத்தில் ஏற்பட்ட இன்னொரு பின்னடைவாக அண்மையில் இலங்கையில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவிநீக்கம் செய்யப்பட்டமை அமைந்தது. இவ்வாறான நிலைமையையிட்டு நாம் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம் எனவும் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்த இலங்கை மீது ஓர் அழுத்தம் கொடுப்பதற்காக கடந்த வருடம் நாம் ஐக்கிய நாடுகளி;ன் மனித உரிமைகளுக்கான பேரவையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தோம். இதே விடயத்தையிட்டு இந்த வருடமும் ஒரு தீர்மானத்தை கொண்டுவரவுள்ளோம். இதுவரையில் இதற்கு நல்ல ஆதரவு உள்ளது என நான் எண்ணுகின்றேன்' எனவும் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59666-2013-02-27-08-21-07.html#sthash.5dJzB1Nd.dpuf -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’