வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

யுத்தத்தின் அதிக பாதிப்புக்களைச் சுமந்தவர்கள் வன்னியின் வறிய மக்களே - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

டந்த கால யுத்தத்தின் அதிக பாதிப்புக்களைச் சுமந்தவர்கள் வன்னியின் வறிய மக்களே என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று (31) கிளிநொச்சி பாரதிபுரம் புனித செபஸ்ரியான் முன்பள்ளியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பாரதிபுரம் போன்ற பாதிக்கப்பட்ட மற்றும் பல வழிகளிலும் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் மக்களின் முன்னேற்றதிலும் நாம் அதிக அக்கறை எடுத்து செயற்பட்டுவருகின்றோம். மக்களுக்கு இன்னும் ஏராளமான தேவைகள் குறைபாடுகள் உண்டு என்பதை நன்கறிவோம். மீள்குடியேற்றத்தின் பின் எவ்வாறு மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கானப்பட்டதோ அதேபோன்று இனிவரும் காலங்களிலும் படிப்படியாக மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், இக்கிராமத்தின் பல வீதிகள் மிக மோசமாக கானப்படுகிறது. மழைக்காலங்களில் வன்னியில் பெரும்பாலான வீதிகள் வாய்க்கால்கள் போன்றே கானப்படுகிறது. இதனால் போக்குவரத்தில் மக்கள் பெரும் அளெகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே வன்னியில் உள்ள பெரும்பாலான புழுதி வீதிகளை புனரமைக்கவேண்டிய பொறுப்பு எங்களிடம் உண்டு. ஆனால் அவற்றை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேற்கொண்டு விடமுடியாது. இந்த வீதிகளில் பெருபாலானவை உள்ளூராட்சி சபைகளுக்குச் சொந்தமான வீதிகளே. ஆனால் உள்ளூராட்சி சபைகளிடமோ இந்த வீதிகள் எல்லாவற்றையும் புனரமைக்கும் சக்தி இல்லை. எனவே அரசுதான் விசேட திட்டங்கள் மூலம் வெளிநாடுகள், உலக வங்கி போன்றவற்றிடமிருந்து பெறுகின்ற கடன்கள் மூலம் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்னாக இந்த பிரதேச வீதிகள் தொடர்பில் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் நேர்த்தியான திட்டமதிப்பீடுகளை மேற்கொண்டு நிரந்தர புனரமைப்பு வழி சமைக்கப்படும் அதுவரைக்கு விரைவில் இலகு போக்குவரத்துக்கு ஏற்றவகையில் செப்பனிடப்படும் எனக்குறிப்பிட்ட அவர், பாராதிபுரம் கிராமத்தினை இந்தியன் வீட்டுத்திட்டத்திற்குள் முழுமையாக உள்வாங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை பாரதிபுரம் கிருஸ்னபுரம் மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு கிளிநொச்சி நகர குடிநீர் திட்டத்தின் மூலம் நிரந்தர தீர்வுகானப்படும் இதேவேளை காணியற்ற மக்களுக்கு பாரதிபுரம் பிரதேசத்திற்கு அருகில் அரச காணிகள் இருக்கும் பட்சத்தில் இனம்கானப்பட்டு பகிர்ந்தளிப்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுவதோடு ஒரு பொதுநோக்கு மண்டபத்திற்கும் ஏதேனும் ஒரு திட்டத்தின் ஊடாக அமைப்பதற்கும் நெல்சிப்திட்டத்தின் ஊடாக அமைக்கப்பட்டுவரும் இரணைமடு சந்தை கட்டிடத்தினை வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் பூரணப்படுத்தி பணிகளை முடித்து வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்கவும் உரிய அதிகாரிகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மயானம் புனரமைப்பு உள்ளிட்ட பல தேவைகள் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவைகளும் உரிய திட்டங்களின் ஊடாக படிப்படியாக நிச்சயம் பூர்த்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். பாரதிபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் கிருஸ்ணசாமி, கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன், கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆனையாளர் ஜக்சீல், கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர், கரைச்சி பிரதேச சபை செயலாளர் கிருஸ்ணகுமார், கிராம அலுவலர் திருமதி ஜீவநாயகம், ஈழ மக்கள் ஜனநாயகட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகச் சங்கத்தலைவர் இரத்தினமணி மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கலந்துகொண்டனர்.






-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’