வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் : இலங்கை அரசு தலையீடு செய்யும்


நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரங்கள், அங்கு மீறப்பட்டு வருகின்ற சிறுவர் உரிமைகள் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச சட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளதுடன் தலையீடுகளை மேற்கொள்வதற்கு தகலவ்களை திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் காப்பகங்களால் பொறுப்பேற்கப்பட்டு சிறுவர் விடுதிகளிலும் வளர்ப்புப் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள பெறும்பாலான சிறுவர்கள் அங்கு தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் மரணங்கள் சம்பவித்திருப்பதாகவும் நோர்வேயின் பல்வேறு ஊடகங்களில் இருந்து கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நோர்வே சிறுவர் காப்பக சிறுவர் விடுதியில் தங்கியிருந்த 15 வயது சிறுமியொருவர் போதை மருந்துக்கு அடிமையான நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி காணமால் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆந்த சம்பவம் நோர்வே பேர்கனில் இடம் பெற்றுள்ளதாக நோர்வே ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதே போன்றெ 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும் 17 வயது சிறுமியொருவர் சிறுவர் காப்பகத்தின் பொறுப்பில் இருந்த நிலையில் கடலில் வீழ்ந்து பலியாகியுள்ளார். இந்த சிறுமிகளின் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் இடம்பெற்றவையா என்பதும் சந்தேகத்திற்குரியதே. இந்நிலையில் தான் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படுகின்ற குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் எந்த அளவில் பாதுகாக்கபடுகின்றனர், பராமரிக்கப்படுகின்ற என்பது தொடர்பில் அச்சம் வெளியிட்டுள்ள பாதிக்கப்பட்ட பெற்றோர் தமது பிள்ளைகயை உடனடியாகவே தம்மிடத்தில் பெற்றுத்தருமாறு உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றனர். இவ்விவகாரம் ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நோர்வேயிக் வசதியும் இலங்கைப்பிரஜைகள் தொடர்பில் தலையிடு செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நோர்வேயின் சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளை கண்டித்தும் குழந்தைகளை பெற்றோரிடத்தில் பெற்றுக்கொடுப்பதற்கும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற என்ற www.familiestiftelsen.no இணையத்தளத்தின் ஊடான தொடர்பு கொள்வதன் மூலம் சட்ட ரீதியான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மேற்படி இணையத்தளத்துடன் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை அனுக முடியும். எது எவ்வாறிப்பினும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஜெனீவா பேரவை கூடவிருக்கின்ற நிலையில் நேர்வேயின் சிறுவர் காப்பக விவகாரம் கேள்விக்குட்படுத்தப்படும் சாத்தியம் அதிகரித்திருக்கின்றது என்றே சர்வதேசத் தகவல்கள் கூறுகின்றன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’