வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 பிப்ரவரி, 2013

யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைப்பு!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்திய செயற்பாடுகளை கொண்ட நான்கு மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் திறந்து வைத்து மக்கள் சேவைக்காக கையளித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது அழைப்பின் பேரில் இரண்டுநாள் பயணம் மேற்கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள ஜனாதிபதி அவர்கள் மேற்படி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

ஜப்பான் அரசின் நிதியுதவியுடன், ஜெய்க்கா நிறுவனத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நான்கு மாடிக்கட்டிடம் சுமார் 3000 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

திறந்து வைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தொகுதியில் அதிநவீனவசதிகளைக் கொண்டதாக சத்திர சிகிச்சைக் கூடங்கள் 10, அவசர சிகிச்சை கூடங்கள் 2, ஆய்வுகூடம் மற்றும் எக்ஸ்ரே கதிர்க் கூடங்கள் தலா ஒவ்வொன்றும் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

குடாநாட்டு மக்கள் மட்டுமல்லாது பலதரப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பல்வேறு நவீன மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் ஊடாக மக்கள் இன்று முதல் முழுமையான மருத்துவ சேவைகளையும் பெற்றுக் கொள்ள முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதாக நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி அவர்கள் பாடசாலை மாணவர்களின் இசை நடனத்துடனும், மங்கள வாத்தியத்துடனும் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியத் துறை சமூகத்தின் வரவேற்பினையடுத்து தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஞானவயிரவர் ஆலயத்தில் வயிரவநாதக் குருக்கள் தலைமையில் சிறப்புப் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து நினைவுக்கல்லை ஜனாதிபதி அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததுடன், புதிய கட்டிடத் தொகுதியையும் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். பின்னர் புதிய கட்டிடத் தொகுதியின் பல்வேறு பிரிவுகளுக்கும் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள் நவீனரக மருத்துவ உபகரணங்களை பார்வையிட்டதுடன் அவை தொடர்பில் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, பிரதியமைச்சர் லலித் திசாநாயக்க, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நௌபுகிட்டோ வேறபோ, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின், உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.















-->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’