வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 பிப்ரவரி, 2013

சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை பாடத்திட்டம் தொடர்பில் சாதகமான தீர்வு பெறப்படும்: ஹக்கீம்



ட்டக் கல்லூரி நுழைவு பரீட்சை பாடத்திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு சட்டக் கல்வி மன்றத்துடன் கலந்துரையாடி சாதகமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான சட்டத்தரணிகள் அமைப்பினர், சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் சகிதம் இன்று வியாழக்கிழமை நீதியமைச்சில் நடாத்திய சந்திப்பின் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, ஜனாதிபதியின் ஆலோசகர் சுமித் விஜேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும், சட்டத்தரணிகள் சிலரும் இச் சந்திப்பில் பங்குபற்றினர். பிரஸ்தாப அமைப்பினர் கையளித்த மகஜரை பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட காரணத்தினால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இது தொடர்பில் பிரதம நீதியரசருடனும் சட்டக் கல்வி மன்றத்துடனும் கலந்துரையாடி சாதகமான முடிவொன்றை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இன்றைய கூட்டத்தில் சட்டக் கல்லூரி அனுமதி விவகாரத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெரிவிக்கப்பட்ட உணர்வுப்ப+ர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் அபிப்பிராயங்களின் ஊடாக இந்தப் பிரச்சினையின் ஆழம் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது. சட்டக் கல்லூரி பரீட்சை சம்பந்தமாக சில பிரச்சினைகள் ஏற்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரிய ஆலோசனைகளை வழங்கினார்;. அத்தகைய சந்தர்ப்பத்தில் சட்டக் கல்லூரி மன்றத்தின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஜனாதிபதி நடந்து கொண்டார். இச் சந்திப்பில், நல்லாட்சிக்கான சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நீத் உதேஷ், அதன் செயலாளர் சட்டத்தரணி ஹேமந்த நாகொட விதாரண மற்றும் சட்ட மாணவர்களும், பெற்றோர்களும் கருத்துக்களை தெரிவித்தனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’