வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 6 பிப்ரவரி, 2013

தன்னாட்சி அளிக்க முடியாதென கூறியிருப்பது இந்திய அரசை அவமதிப்பது போன்றது'


லங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்க முடியாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருப்பது இந்திய அரசாங்கத்தை அவமதிப்பது போன்று உள்ளது என பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இலங்கை தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் அந்த நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 2002ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஒப்புக்கொண்டது. அதன் பிறகு அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மூண்டதால் அமைதி முயற்சி தோல்வியடைந்தது. 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி அப்போதைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்தபோது, தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். ஆனால், இப்போது தன்னாட்சி அதிகாரம் வழங்க முடியாது என பேசியிருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வகை செய்வோம் என்று கூறி வரும் இந்திய அரசாங்கத்தை அவமதிக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சு அமைந்துள்ளது. இலங்கை இனப் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்பதை உணர்ந்து அதனை அடைவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்' என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’