இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து விசாரணை நடாத்தப்படும் என வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு இலங்கை தவறியுள்ளதாக ஐக்கிய நடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
உள்ளூர் அதிகாரிகளின் விசாரணை தெளிவற்று காணப்படுவதாகவும் சுயாதீனம் இல்லை எனவும் பாரபட்சமற்றதாக இருக்கிறது எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விசாரணை நம்பிக்கையற்றதாக காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஏ.எப்.பி. இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த செப்டெம்பரில் இலங்கைக்கு வந்த நிபுணர் குழுவால் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு தசாப்தங்களாக நிலவிவரும் இன முரண்பாட்டுக்கு நீதி வழங்க உண்மையான விசாரணை பொறிமுறை ஒன்றை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும் என அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஒகஸ்ட் மாதம் கொல்லப்பட்ட தொண்டர் பணியாளர்கள் 17 பேர் கொலை குறித்து உரிய விசாரணை நடாத்தப்படும் என அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியையும் நிறைவேற்ற தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல் குறித்த உள்நாட்டு விசாரணையில் வெளிப்படை தன்மை இல்லை என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்படும்வரை 100,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. கணிப்பீடுகள் கூறுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தம் நடந்த ஒரு மாதத்தில் 40,000 பொதுமக்கள் படையினரால் கொல்லப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை மறுத்தது. கடந்த ஆண்டிலும் தொடர்ந்த சட்டத்திற்கு முரணான கொலைகள், கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் இடம்பெற்றன. இவ்வாறான சம்பவங்கள் இலங்கை மீது போர் குற்ற விசாரணையை வலியுறுத்த வலு சேர்ப்பதாக நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சுதந்திர ஊடகங்கள் மீதான தாக்குதல் தொடர்வதாகவும் கைதிகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கொலை செய்யப்படுவதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’