வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 பிப்ரவரி, 2013

ஹலால் சான்றிதழ்; அரசிடம் வழங்குவது திருப்திகரமானதல்ல: ரணில் -



லால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை அரசாங்கத்திடம் கையளிப்பது திருப்திகரமான நடவடிக்கை அல்ல என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
சிங்கள – முஸ்லிம் மக்களிடையே உண்டான அமைதியின்மையை போக்குவதற்கு மேற்கொள்ள வேண்டியவை நிறையவே உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். அல்லாஹ் என்ற பெயர் எழுதப்பட்ட பன்றியின் படத்தை எடுத்து சென்ற சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் அல்லது முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எந்தவொரு பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தப்படவில்லை என நாடாளுமன்ற அபை தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மறுத்தமை உண்மையல்ல என ரணில் விக்ரமசிங்க மீள வலியுறுத்தினார். சிங்கள – முஸ்லிம் மக்களிடையே உண்டான விரும்பத்தகாத பிரச்சினைகளை ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர் காசீம் தலைமையில் ஒரு முழுவை நியமித்துள்ளதாக தெரிவித்த அவர், இரண்டு வாரங்களில் அந்த குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார். இந்த குழுவில் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மாகாண சபை உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி மற்றும் எம்.என். நசீர் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர். இதேவேளை, ஹலால் என்பதன் கருத்து சுத்தமானது என்பதாகும் என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்தார். ஹலால் உணவை உண்பதனால் ஒரு பௌத்தர் முஸ்லிம் ஆகமாட்டார். அத்துடன் ஹலால் அல்லாத உணவை உண்பதால் ஒரு முஸ்லிம் பௌத்தராகமாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார். உணவுக்காக கொல்லப்படும் விலங்கை நோகடிக்க கூடாது என ஹலால் கற்பிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59676-2013-02-27-10-30-16.html#sthash.L9K0eacB.dpuf -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’