
உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியே அவர் இந்த சட்டமூலத்தை கிழித்து ஏறிந்தார். பூஜாப்பிட்டிய பிரதேசசபையின் மாதாந்த கூட்டம் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு எதிர்ப்பினை தெரிவித்தார். தனது எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்று முன்னர் உரையாற்றிய அவர், உள்ளுராட்சி மன்றங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச் பல அதிகாரங்களை வழங்கி இருந்தார். இப் புதிய சட்டத்தின் மூலம் இவ்வதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதுடன் அதன் தலைவர்களுக்கு இருந்த அதிகாரமும் இல்லாமல் போகின்றது. எனவே இச் சட்டத்தை நாம் எதிர்க்கின்றோம் என்று கூறினார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்டத்தை எதிர்க்கும் பிரேரனையை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுனில் கொடுகொடெல்ல வழிமொழிந்து உரையாற்றியதுடன் அந்த பிரேரணை இந்த சபையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’