வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 7 பிப்ரவரி, 2013

தொண்டர் ஆசிரியர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை….


டமாகாணத்தில் வலயரீதியாகவும் பாடரீதியாகவும் தொண்டராசிரியர்களாக கடமைபுரிவோருக்கு நிரந்தர ஆசிரிய உதவியாளர் நியமனம் வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நாட்டில் கடந்தகாலங்களில் தொண்டராசிரியர் நியமனம் வழங்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வகிபாகம் முக்கியத்துவமிக்க ஒன்றென்பது வரலாறாகும். 90களின் ஆரம்பத்தில் கல்விச்சேவை முற்றாக பாதிக்கப்பட்டிருந்த நெடுந்தீவில் அமைச்சரவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தொண்டராசிரியர் நியமனமானது பின்னர் யாழ். தீவகப்பகுதிகளுக்கும் தொடர்ந்து யாழ். மாவட்டத்திற்கும் அதனைத்தொடர்ந்து வடமாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இதன்பிரதிபலனாக தென்னிலங்கைக்கும் விஸ்தரிக்கப்பட்டமை தெரிந்ததே. இந்நிலையில் கடைசியாக இலங்கை பூராகவும் வழங்கப்பட்ட தொண்டராசிரியர்களின் ஆசிரிய நியமனத்தின்போது வடபகுதியில் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் வசித்ததன் நிமித்தம் நியமனத்தை தவறவிடப்பட்டோர் தமது நிலைமையினை தெரியப்படுத்தியதை அடுத்து அவர்களின் நலனிலும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் கூடிய அக்கறை செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனடிப்படையில் இந்நியமனம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக அமைச்சரவை உப குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்திற்றாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’