பி ரித்தானியாவில் இருந்து 2011 ஆம் ஆண்டு பலவந்தமாக இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட 15 இலங்கையர்களும் பாதுகாப்பு பிரிவினரால் குழு பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக சட்டத்தரணி ஒருவரை மேற்கோள்காட்டி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் தற்போது வசிக்கும் 40 வயதான பெண் ஒருவர், தாம் இலங்கையின் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவிடம் தெரிவித்துள்ளார். காணாமல் போன தமது இரண்டு மகன்மாரின் விபரங்களை கோரியபோதே தமக்கு இந்த கதி நேர்ந்ததாக குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே தாம் லண்டனுக்கு தப்பிவந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் நாடு கடத்தப்படும் இலங்கையர்களின் விடயம் தொடர்பில் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு பிரிவு உரிய கரிசனையை காட்ட வேண்டும் என்று தெ கார்டியன் கோரிக்கை விடுத்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’