இ ந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான 'றோ'வின் பணிப்பாளர் அலோக் ஜோசிக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
திருப்பதியில் உள்ள விருந்தினர் மாளிகையிலேயே சனிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தகாய மற்றும் திருப்பதிக்கான இரண்டு நாள் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதியை இந்திய அரசியல் தலைவர்கள் எவரும் சந்திக்காத நிலையில் றோ பணிப்பாளர் அலோக் ஜோசியின் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. றோவின் பணிப்பாளராக அலோக் ஜோசி கடந்த மாதமே பொறுப்பேற்றிருந்தார் என்பதும், அதன் பின்னர், இலங்கை ஜனாதிபதியை அவர் சந்தித்திருப்பது இதுவே முதல்தடவை என்றும் தெரியவருகிறது என்று த இந்து செய்தி வெளியிட்டுள்ளது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’