பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பை ஏற்று மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இம்மாதம் 12ம் திகதி யாழ்.வரும் ஜனாதிபதி அவர்கள், யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். இதன்பிரகாரம், 12ம் திகதி காலை 10.00 மணிக்கு சுன்னாகத்தில் அமையப் பெற்றிருக்கும் யாழ்.ஒளி மின் உற்பத்தி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார். 11.00 மணிக்கு யாழ்.மாவட்ட அபிவிருத்தி முன்னேற்றங்கள், தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பான ஆய்வு நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் கலந்து கொள்கிறார். இந்நிகழ்வில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட, மாகாண மற்றும் மத்திய அரசின் துறைசார் அதிகாரிகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொள்வர். அன்றைய தினம் மதியம் நயினாதீவுக்குச் செல்லும் ஜனாதிபதி அவர்கள் அங்கு பௌத்த விஹாரைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இறங்கு துறையை திறந்து வைப்பதுடன், அங்கு ஏற்பாடு செய்யப்படும் சமய நிகழ்வில் கலந்து கொண்டு, நாகபூஷணி அம்மன் ஆலயத்தைத் தரிசிப்பதுடன், நயிணாதீவு மக்களையும் சந்திக்கின்றார். மறுநாள் (13) காலை யாழ்ப்பாணத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புகள் பிரதிநிதிகள், சமூகப் பெரியார்களைச் சந்திக்கும் ஜனாதிபதி அவர்கள், குடாநாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அங்கு பொது நிகழ்விலும் கலந்து கொள்வார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’