இ லங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்குமரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவாலும் அரசாங்கத்தினாலும் கவலையும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடாளுமன்றத்திலும் அவருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி, பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ரிசானாவின் மரண தண்டனை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இளம் பாராயத்து பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பற்றி உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் காணப்பட்ட எதிர்ப்புக்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் அதியுயர் மட்ட முயற்சிகளுக்கு மத்தியிலேயே ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ர்pசானாவின் மரணத்தினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்களுடன் கவலையில் ஆழ்ந்திருக்கும் இலங்கை மக்களுடன் இணைந்து சோகத்தில் ஆழ்ந்திருக்கும் ரிசானாவின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றனர். அத்துடன் ரிசானாவின் விடுதலை வேண்டி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டது. இது தொடர்பாக நீதி அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள கண்ட அறிக்கையில், "ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மன வேதனையும் அடைந்தேன். அவர் விடுதலை செய்யப்படும் சாத்தியம் உண்டு என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கும், தமக்கும் அரசாங்கத்திற்கும் இறுதி வரை இருந்தது. மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக்கின் பெற்றோரும், குடும்பத்தினரும் என்னுடன் இந்த விவகாரம் தொடர்பில் நீண்ட காலமாக தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், நானும், அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் சிலரும் நீதித்துறையும், சட்டமா அதிபர் திணைக்களமும், குற்றத்தடுப்புப் பிரிவினரும், ரிசானா நபீக்கின் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தோம்" என்றார். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கை சவூதி அரசாங்கம் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்துள்ளது. வயது குறைந்த நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ரிசானா செய்ததாக சொல்லப்படும் குற்றம் தொடர்பில் தெளிவற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பராமரிப்பில் இறந்த குழந்தையின் மரணம் ஒரு கொலையா அல்லது விபத்தா என்ற சந்தேகம் உலகம் முழுக்க நிலவுகிறது. எதுவாக இருந்தாலும் வயதுவராத பருவத்தில் செய்யப்பட்டது ஒரு குற்றம் அல்ல.அதற்கு சீர்திருத்தமே நாகரீக உலகு கண்ட பிராயச்சித்தம். வயதுவராத பருவத்தில் செய்யப்பட்ட நிகழ்வை காரணமாக கொண்டு மரண தண்டனை வழங்குவது காட்டுமிராண்டித்தனம் சகோதரி ரிசானாவின் படுகொலை செய்தியை கேட்டு நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவரது பெற்றோரையும் சகோதரர்களையும் அதிர்ச்சி துன்பம் ஆகியவற்றில் இருந்து எல்லாம்வல்ல அல்லாற் காப்பாற்ற வேண்டும். நமது நாட்டு பிரஜையான இந்த இளம் பெண்ணை உயிருடன் மீட்டு தருவதற்கு நமது நாட்டு அரசாங்கத்துக்கு முடியாமல் போய் விட்டது. தொடர்ச்சியாக நமது அமைச்சர்களும்இ அரச அதிகாரிகளும் சொல்லி வந்த உத்தரவாதங்கள் பொய்த்துவிட்டன. சவூதி அரேபியா ஒரு அரபு முஸ்லிம் நாடு. ரிசானா ஒரு முஸ்லிம் இனத்தை சார்ந்த இஸ்லாமிய சகோதரி. இதே நிலைமை சவூதி நாட்டுக்கு செல்லும் ஒரு சிங்கள பெண்ணுக்கு ஏற்பட்டு இருந்தால், அந்த விவகாரமும் இந்த அளவுக்கு இழுபறிப்பட்டு இருந்தால், இந்நேரம் அதை ஒரு காரணமாக கொண்டு இந்நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு இனவாத பிரச்சாரத்தை பேரினவாதிகள் முன்னெடுத்து இருப்பார்கள் என்பதை முஸ்லிம்கள் மறந்துவிடக்கூடாது. முஸ்லிம் என்பதற்காக முஸ்லிம் நாடுகள் சலுகை காட்டும் என்றும் தமிழர் என்பதற்காக இந்தியா கருணை காட்டும் என்றும் நம்பிக்கொண்டு இருக்கும் பிற்போக்கு சிந்தனைகளை கைவிட வேண்டிய காலம் வந்துவிட்டது" என்றார். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரிசானா நபீக்கின் மறுமை வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய ரிசானா நபீக்கின் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இஸ்லாமிய சரீஆ சட்டத்தின்படி கொலைக்கு கொலை தண்டனையாக இருந்தபோதிலும் மன்னிப்பளிப்பதை இஸ்லாம் விரும்புகின்றது" என்றார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’