கறுப்புப் பணம் ஒழிய வேண்டும். அதற்கு இப்போதுள்ள வரிகளை சரியாகக் கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்களைக் கடுமையாக்குங்கள், திரையுலகினருக்கு விதிக்கப்பட்டுள்ள சேவை வரியை திரும்பப் பெறுங்கள், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகினர் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 12.36 சதவீத சேவை வரிக்கு எதிராக இன்று வள்ளுவர் கோட்டம் எதிரில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று தமிழகத்தில் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையுலகின் அனைத்துப் பணிகளும் இன்று ஒரு நாள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, இரண்டு மணிநேரம் மேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் அவர் பேசுகையில், "கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவர, மத்திய அரசு பெரிய பெரிய திட்டங்களைப் போடும்போது, வரிகளை மேலும் மேலும் உயர்த்துகிறது. ஆனால் இப்படிச் செய்வதால் கறுப்பு பணம்தான் அதிகரிக்கும் என்பது அரசுக்கு தெரியாததல்ல. கறுப்புப் பணத்தை ஒழிக்க, வரி செலுத்தாதவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அதே நேரம், இந்த கோரிக்கைகளை ஏற்று சேவை வரியை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’