யாழ்.பல்கலைக் கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் மீளவும் ஒழுங்காகவும் சீராகவும் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அவர்களை விடுவிப்பதற்கு முயற்சி மேற்கொள்வேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள உயர்கல்வி அமைச்சில் அதன் அமைச்சர் எஸ்.பி திஸநாயக்கா மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கினார்.
கடந்த நவம்பர் மாத இறுதியில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் படைத்தரப்பால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நான்கு மாணவர்களினதும் விடுதலையை வலியுறுத்தி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து வருவதனால் பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல்வேறு நெருக்கடிகள் எதிர்கொள்ளப்பட்டுள்ளன. இந்தநிலையில் பல்கலைக்கழகத்தின் கல்விச்செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுக்கும் வகையில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும் மேற்படி கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தடைபட்டுள்ள கல்விச்செயற்பாடுகளை மீளவும் ஒழுங்காகவும், சீராகவும் முன்னெடுக்கப்படவேண்டுமென்பதுடன், அவ்வாறு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மாணவர்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் கலந்துரையாடி அவர்களது விடுதலை தொடர்பாக கவனம் செலுத்தவுள்ளதாகவும் பல்கலைக்கழக சமூகத்தினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’