வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 25 ஜனவரி, 2013

வடமாகாண பாடசாலைகளின் அத்தியாவசிய தேவைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டுசென்றார்


வடபகுதியில் பின்தங்கியதும் பாதிக்கப்பட்டதுமான பாடசாலைகளின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் மூலதனச்செலவுகள் தொடர்பாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியினதும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினதும் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
குறிப்பாக கடந்தகால போர்ச்சூழலில் பாதிக்கப்பட்டும் மற்றும் பின்தங்கியதுமான நிலையில்; வடபகுதி பாடசாலைக் கட்டடங்களின் புனரமைப்பு, நிர்மாணம், மற்றும் மூலதனச் செலவினங்கள் தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதியின் கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொண்டு சென்றுள்ளார். மேலும் கழிப்பறை வசதிகள் இல்லாத, குடிநீர் வசதியற்ற மற்றும் வேறு அடிப்படைத் தேவைகளை எதிர்நோக்கியுள்ள பாடசாலைகள் தொடர்பில் அமைச்சரவர்கள் இவ்விடயத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்திலும் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே பாடசாலைகளின் அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருவதுடன் தொடர்ச்சியான பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவது தெரிந்ததே.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’