நி றைவேற்று, நீதி, சட்டவாக்கம் ஆகிய துறைகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருந்தன. அந்த முரண்பாடுகள் தற்போது நிறைவடைந்துவிட்டன. என்று அரசாங்கம் நேற்று அறிவித்தது.நீதிமன்றத்தை நாம் மதிக்கின்றோம். நீதித்துறையில் இருக்கின்ற சிலரே அதன்மீது நம்பிக்கையிழக்க செய்துவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
நாடாளுமன்றம் சுநத்திரமாகவே செயற்பட்டது சுதந்திரமாக செயற்பட்டமைக்கான பாரம்பரியம் இருக்கின்றது. அரசியமைப்பிற்கு மதிப்பளித்தே சகலரும் செயற்பட்டனர்.
அரசியலமைப்பு குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் என்னால் எதனையும் கூறமுடியாது. நாடாளுமன்றம் எதிர்வரும் 8 ஆம் திகதி கூடுகின்றபோது உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பொன்றை விடுப்பார்.
உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கலாம். எனினும், சபாநாயகரின் அறிவிப்புக்கே நாம் கட்டுப்பட்டுள்ளோம்.
வீசியெறிந்துவிடும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்குள் பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சிகள் யாவும் ஒரு குடையின் கீழே இருக்கின்றன. அந்த கட்சிகள் தங்களுடைய யோசனைகளை முன்வைப்பர்.
அந்த யோசனைகளை பயன்படுத்த முடியுமாயின் அதனை அரசாங்கம் பயன்படுத்தும். யோசனைகள் தேவையற்றதாயின் அதனை வீசியெறிந்துவிடும்.
தற்;போது அமுலில் இருக்கின்ற அரசியலமைப்பின் பிரகாரமே குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டு நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் முதன்முறையாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள. நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் தனித்தனியாக யார் கூறினாலும் சபாநாயகரின் அறிவிப்பையே நாம் ஏற்றுக்கொள்வோம்.
உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால். அடுத்தநாள் உங்களுடைய தீர்மானங்களும் மாறிவிடும்.
நீதி,சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்றுத்துறை ஆகியவற்றுகளுக்கு இடையில் முரண்பாடுகள் நிலவின. அந்த முரண்பாடுகள் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சரத் பொன்சேகா
நீதிமன்றத்தை மதிக்கின்றோம் எனினும், நீதிமன்றத்தில் இருக்கின்ற சிலரே நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை இழக்கசெய்துவிட்டனர்.
சரத் பொன்சேகா தான் விழுந்துள்ள குழிக்குள் இழுத்துக்கொள்வதற்காக பிரதம நீதியரசரை அழைத்துள்ளார். அதிலிருந்தே இதன் பின்புலன் தெளிவாகின்றது.
சரத் பொன்சேகா தான் அணிந்திருந்த கோர்டை கழற்றிவிட்டு அரசியலில் ஈடுபட்டார். இவரோ கோர்டை அணிந்துக்கொண்டே செயல்படுகின்றார் என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’