வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 ஜனவரி, 2013

அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்


வனமாக இருக்குமாறு இனந்தெரியாத நபரொருவர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவை தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவின் மனைவியின் யைடக்க தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து இனம்தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து அமைச்சின் பாதுகாப்பு அதிகாரிகள் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர். இதில் அமைச்சர் 3 மணியளவில் வீட்டிற்கு சென்ற பின்னர் சுமார் 3.30 மணியளவில் அமைச்சரின் மனைவியின் கையடக்க தெலைபேசிக்கு பிரசாந்தன் என அடையாளப்படுத்திக் கொண்ட நபரொருவர் அமைச்சரிடம் பேச விரும்புவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் கையடக்க தொலைபேசியை அமைச்சருக்கு அளித்த போது தமது தமது மனைவிற்கு சிரமம் ஏற்படுத்த வேண்டாமென குறிப்பிட்ட நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’