அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு பாதிப்புக்களை சுமந்து முன்னேற முயற்சித்துக்கொண்டிருக்கும் எமது மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு வாழ்வின் எழுச்சித்திட்டம் அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றமான மாற்றத்தை ஏற்படுத்தும் எனவே இதற்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். குறிப்பாக இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டுசெல்வதற்கு தங்களது அர்ப்பணிப்புமிக்க சேவையினை நிரந்தர நியமனம் பெறவுள்ள பட்டதாரி பயிலுநர்களிடமிருந்து இந்த பிரதேசம் எதிர்பார்க்கிறது அத்தோடு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கின்ற போதே மக்களின் நலன் கருதி அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களை அர்த்தமுள்ளதாக்க முடியும் அப்போதே மக்களும் அதன் முழுமையான பயனைபெற முடியும் என தெரிவித்த அவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவு வறுமைகோட்டின் கீழ் வாழும் மக்களில் சமூர்த்தி முப்பது வீதமான மக்களுக்கே கிடைத்துள்ள நிலையில் வாழ்வின் எழுச்சி திட்டமும் மேலும் பல மக்களின் வறுமையினை நீக்குவதற்கு வழிவகுக்கும் எமது மாவட்டத்தைப் பொறுத்தவரை இத்திட்டம் அவசியமான ஒன்றே பல்வேறு பொருளாதார நிபுனர்களினால் வறுமையை ஒழிக்கும் இத்திட்டம் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஏராளமான நன்மையான விடயங்கள் உண்டு அவற்றின் பயன்களையும் எமது மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதோடு திட்டங்கள் முறையாக நியாயமான வகையில் மக்களுக்குச் சென்றடைய வேண்டும். வறுமையற்ற வாழ்க்கையை வாழ ஏங்கிக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு வாழ்வின் எழுச்சி ஒரு வரப்பிரசாதமே எனவும் குறிப்பிட்டார்.
பூநகரி பிரதேச செயலர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பூநகரி பிரதேச சபைத்தலைவர் சிறிஸ்கந்தராசா, கிளிநொச்சி மாவட்டச்செயலக திட்டப்பணிப்பாளர் மோகனபவன், பிரதிதிட்டப்பணிப்பாளர் கேதீஸ்வரன் மற்றும் கால்நடை, விவசாய, கடற்றொழில் கமநலசேவை, போன்ற பல்வேறுத்திணைக்களங்களின் தலைவர்கள் கிராம அலுவலர்கள், மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’