நாட்டில் தற்சமயம் நடைமுறைப்படுத்தப்படும் ஆயிரம் பாடசாலைகள் முன்னோடித் திட்டத்தின்கீழ் ஆசிரிய சேவை வெற்றிடங்களை பட்டதாரிகள் ஊடாக நிரப்புவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.மேற்படி விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தலைமையிலான கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான அமைச்சரவர்களின் சந்திப்பிலேயே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடபகுதியில் ஆயிரம் பாடசாலைகள் முன்னோடித் திட்டத்தின்கீழ் 270 வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டியிருந்தபோதும் 102 பேர் மட்டுமே அதற்கான நியமனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் 40 விஞ்ஞான ஆசிரியர்கள், 09 கணித ஆசிரியர்கள், 85 ஆங்கில ஆசிரியர்கள், 34 தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்கள் ஆகிய வெற்றிடங்கள் நிலவுகின்றன. இவ்விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆயிரம் பாடசாலைகள் முன்னோடித்திட்டத்திற்கு மேலதிகமாக வடமாகாணத்தின் ஏனைய பாடசாலைகளிலும் நிலவும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் போதிக்கும்பொருட்டு மேற்குறிப்பிட்ட துறைகளில் பட்டம்பெற்ற, கடந்த வருடம் இடம்பெற்ற பட்டதாரி பயிலுனர் சேவையில் இணைக்கப்பட்டவர்களும் ஏற்கனவே நிரந்தர நியமனம் பெற்றவர்களும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஆசிரிய சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினால் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் பட்டதாரி பட்டம்பெற்ற ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களாக சேவையாற்றுவோரும் இக்கற்கை நெறிகளைப் போதிக்க விரும்பும் பட்டத்தில் அவர்களையும் இத்திட்டத்தில் உள்வாங்க அமைச்சரவர்கள் தீர்மானித்துள்ளார். மேற்படி விடயங்கள் தொடர்பாகவும், பாடநெறிகளைக் கற்பிப்பதில் ஆசிரிய சேவை வெற்றிடங்கள் நிலவுகின்றமை தொடர்பான விடயங்களும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள் ஊடாக நிரப்ப அமைச்சரவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’