வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 19 ஜனவரி, 2013

ஷிராணி விவகாரம்; ஐரோப்பிய ஒன்றியம் கவலை


முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடர்பில் கவலை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், மேற்படி நடவடிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. துறைகளுக்கு இடையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதன் மூலம் நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை விவகார பிரதிநிதி கதரீன் அஸ்டன் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் மட்டும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சட்டங்களை இலங்கை அரசாங்கம் மதித்துச் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஏனைய மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் உரிமைகளையும் உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’