வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


டக அடக்குமுறைகளுக்கு எதிராக கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை கறுப்பு ஜனவரி ஆர்ப்பாட்ட பேரணியும் எதிர்ப்புக் கூட்டமும் நடத்தப்பட்டது.
லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பெருந்திரளானோர் பேரணியாக பொதுநூலக கேட்போர் கூடத்திற்கு சென்று அங்கு எதிர்ப்புக் கூட்டத்தையும் நடத்தினர். ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் எனும் தொனிப்பொருளிலான இந்த ஆர்ப்பாட்ட பேரணியினை ஊடக அமைப்புக்களின் ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்திருந்தது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களான, லசந்த விக்ரமதுங்க, சுகிர்தரன், சிவராம், நிமல்ராஜ், காணமல்போன பீரகீத் எக்னெலிகொட ஆகியோர் இதன்போது நினைவுகூறப்பட்டனர். 'பீரகீத் எக்னெலியகொடவை கடத்தியவர் எங்கே?', 'போத்தல ஜயந்த, குகநாதன் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை?', 'லசந்த விக்ரமதுங்க, சுகிர்தரன், சிவராம் மற்றும் நிமல்ராஜ் ஆகியோரை கொலை செய்தவர்கள் எங்கே?' போன்ற பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அத்துடன் இன்னும் சிலர் கறுப்பு துணியினால் தங்களுடைய வாயை கட்டிக்கொண்டதுடன் இன்னும் சிலர் கறுப்பு துணியை தலையில் கட்டி தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, விஜித ஹேரத், திஸ்ஸ அத்தநாயக்க மற்றும் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோரும் சட்டத்தரணிகள் மற்றும் தொழிற் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர். சுதந்திர ஊடக இயக்கம், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் தெற்காசிய ஊடக அமைப்பின் இலங்கை கிளை ஆகிய அழைப்புக்கள் இந்த ஊடக அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’