நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை இந்தியாவின் அழுத்தத்துடன் அங்கத்துவம் வகிக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இதனால் எதிர்வரும் சில மாதங்களுக்குள் நாம் ஒரு தீர்க்கமான முடிவினை அரசியலில் எடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு.இராசமாணிக்கத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"அமரர் சி.மு.இராசமாணிக்கம் அவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களை மாத்திரமின்றி முஸ்லிம் மக்களையும் மதித்து வாழ்ந்தவர். ஏனெனில் தமிழர்களுக்கும் முஸ்லிங்களுக்கும் இந்த நாட்டில் ஒரே பிரச்சனை தான் உள்ளது. அதனை நாழ் ஒன்றிணைந்து பேச வேண்டும் என மிகவும் துல்லியமாக எடுத்தியம்பிருந்தார். தற்போது எமது நாட்டில் சிங்களமும் தமிழும் பிரதான மொழி என்று பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் தற்போது தமிழ் மொழியினை பயன்படுத்தும் போது பற்பல பிரச்சனைகள் நிலவுகின்றன. மொழி ரீதியாக பிரச்னைகள் உள்ளது. எனினும் சட்டத்தில் பிரச்சனைகள் உள்ளது. அத்துடன் அரசாங்கம் சட்டத்தினை முறையாக நடைமுறைப்படுத்தாமலும் உள்ளது.
இவற்றினை எல்லாம் பார்கின்றபோது எமது போராட்டம் நின்றுவிடவில்லை. தற்போது எமது போராட்டத்தின் தன்மை விஸ்திரமடைந்துள்ளது. அது எமது மறைந்த தலைவர்களது தந்தை செல்வா, இராசமாணிக்கம், போன்றோர் கூறியது போன்று கலவரமின்றி வேறொரு வியூகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளோம்.
இதனை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக பார்த்துக் கொண்டு இருக்கின்றது. எதிர்வருகின்ற மார்ச மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கை பதில் சொல்லியே ஆக வேண்டும்.இந்த பதிலை வைத்துக்கொண்டு ஐக்கிய நாடுகளிடமிருந்து தமிழர்களுக்கு மிகவும் சாதகமான பதில் கிடைக்கும் என நம்புகின்றோம்.
ஐக்கிய நாடுகளில் எடுக்கபட்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கம் இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவத்தை வெளியேற்றப்பட வேண்டும்.
அத்துடன் அரசியல் கைத்திகள் விடுவிக்கப்பட வேண்டும், பறிபோன தமிழர்களின் நிலங்கள் மீளக் கையளிக்பட்டல் வேண்டும். இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் அமுல்படுத்தப்படல் வேண்டும் போன்ற விதிமுறைகளை விதித்திருந்தது.
ஆனால் இதுவரையில் இவை நடந்ததாக தெரியவில்லை. இவை அனைத்திற்கும் எதிர்வரும் மார்ச் மாதம் தக்க பதில் கிடைக்கும் என நம்புகின்றோம். இலங்கைக்கு எதிர்வரும் வாரங்களில் பல நாடுகளிலிலுந்து பல வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தரவுள்ளனர். இவர்கள் அனைவரும் எமது மக்களின் நிலமையினை கண்காணிக்கவுள்ளனர்.
இவற்றிலும் தமிழ் மக்களின் நிலமை பற்றி மேலும் வெளிக்கொணரப்படும். எம்மை பலமுறை அழைத்து இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அவை அனைத்திலும் எமக்கு திருப்தியில்லாத நிலையில் நாங்கள் அதிலிருந்த விலகியுள்ளோம்" என்றார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’