அமெரிக்க விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது என்று இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
மூவர் அடங்கிய இந்த விசேட பிரதிநிதிகள் குழுவில் அமெரிக்காவின் பிரதி உதவிச் செயலாளர் ஜேம்ஸ் மூர், பாதுகாப்பு பிரதி உதவிச் செயலாளர் விக்ரம் சிங் மற்றும் பிரதி உதவிச் செயலாளர் ஜேன் ஜிம்மர்மன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இக்குழுவினர், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விஜயத்தினை இம்மாதம் 26ஆம் திகதி முதல் பெப்ரவரி முதலாம் திகதிவரை மேற்கொள்ளவுள்ளது என்று தூதுரகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் உயரதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ள மேற்படி குழுவினர், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதில் முன்னேற்றம் மற்றும் தேசிய செயற்குழுவின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர் என்று தூதரகம் தெரிவித்தது. -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’